Sunday, July 19, 2009

பக்திரச சொற்பொழிவாளர் பண்டிதர் சி.வேலாயுதம்

ஈழத்தின் சிறந்த சித்தாந்த பண்டிதர்கள் வரிசையில் சி.வேலாயுதம் அவர்களுக்கு சிறப்பான இடம் உண்டு
வடமராட்சியில் கரவெட்டியில் பிறந்து திக்கம் மற்றும் வதிரி கிராமங்களில் தொடர்ந்தும் வசித்துவரும் இவர் தமிழில் மிகவும் கைதேர்ந்தவர் ஆவார்.
இவர் ஆசிரியப்பணியில் இருந்த காலங்களில் அவர் தமிழ் மற்றும் தான் சார்ந்த சமயமாகிய சைவ சமயம் ஆகியவற்றைதெரிந்தெடுத்து மாணவர்களுக்கு கற்பித்தவர்.கற்பித்தவர் என்றுசொல்வதைவிட அவர் மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் கற்பிக்கும் போதெல்லாம் கற்பிக்கும் பாடம் மற்றும் கருத்து என்னவோ அதுவாகவே மாறிவிடுவாராம்.தமிழில் பாடல்களுக்கு பொருள் பொருளில் வரும் உவமானங்கள்,உவமேயங்கள் எல்லாம் பாடலை பாடிப்பாடியே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் இவர் மாணவர்களின் அடிமனதில் எல்லாம் பதிந்துவிடச்செய்வதில் இவருக்கு நிகர் இவரே தான்...


இவர் ஆசிரியப்பணியில் இருந்து அதிபராகி ஓய்வு பெற்றவர்.அதிபரானாலும் ஆசிரியராக இருந்து விடுவதில் அளப்பெரிய சந்தோசமென்று அடிக்கடி சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொள்பவர். அப்படியாக தமிழ் மற்றும் தன் சமயம் சைவ சமயத்தை மாணவர்களுக்கு ஊட்டுவதில் இவருக்கு தனியான ஈடுபாடு.ஊட்டுவதில் கொஞ்சம் கண்டிப்பானவரும் கூட
சித்தாந்த பண்டிதராகிய இவர் ஆலயக்கிரியகள் மற்றும் சைவ சமயம் சார்ந்த கிரியைகள் எல்லாம் அத்துப்படியாக அறிந்து வைத்திருப்பவர்.அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் உள்ளார்ந்த காரணங்கள் எவை எவை எல்லாம் எங்கு எங்கு செய்யக்கூடாது ஏன் செய்யக்கூடாது என்று எல்லாம் அவர் திறம்பட தெரிந்து வைத்திருப்பவர் தான் திரு,சி.வேலாயுதம் அவர்கள்.இவரின் தந்தை அவர்கள் புராணப்படிப்பில் மிகவும் சிறந்து விளங்கியதனாலோ என்னவோ புராணங்களுக்கு பொருள் சொல்லுவதிலும் சிறுபாரயத்திலிருந்தே தெரிந்து வைத்திருப்பதால் அவர் சிறப்பாக பொருள் சொல்லுபவர்.ஆலயத்தில் இவர் பொருள் கூறும்போது மக்கள் கண்கூட அங்கிங்கு பார்க்காமல் நேராகவே அவரை நோக்கியபடியிருக்கும்.
அதுமட்டுமில்லை இவர் ஒரு மக்கள் மனங்கவர்ந்த பேச்சாளரும் கூட.கம்பீரமான உச்சஸ்தாயியில் அமைந்த இவர் தொனியால் பாடிப்பாடியே சொற்பொழிவு ஆற்றுபவர். விநாயகர் மற்றும் முருக பக்தரான இவர் சொற்பொழிவில் அவர் தன் பிடித்த இறைவனைப்பற்றி சொல்லும் போது ஆனந்தகண்ணீர் விட்டுவிடுவார்.பத்தியில் ஒருகணம் அழுதுவிடுவார்.அப்போது ஏற்படும் குரலின் தழும்பலில் கேட்டுக்கொண்டிருந்த மக்களும் ஒருகணம் கண்ணைத்துடைத்துக்கொள்ளும்.அப்படியாக இவர் சொற்பொழிவுகளில் பக்திரசம் மேலிடும்.
இப்போதும் இந்தியாவில் முருகனின் ஆறுபடைவீடுகளுக்கும் சுற்றிவந்ததை பெருமையாக கொள்பவர்.இடையிடையே தன் சொற்பொழிவுகளின்போது அதை நினைவுபடுத்தும் இவர் ஆனந்தக்கண்ணீரால் அதில் பெற்ற சுகத்தை மக்களுக்கு பகிர்ந்துகொள்பவர்.

செல்வச்சந்நிதி ஆச்சிரம கலைக்கூடத்தில் இவர்கொஞ்சம் ஈடுபாடுமிக்கவர்.அங்கும் இவர் கம்பீரமான குரல் எப்போதும் சொற்பொழிவுகளினூடாக ஒலிக்ககேட்பதுண்டு.முருகனின் நாமத்தை தான் தாங்கிய இவர் கந்தபுராணத்தில் கைதேர்ந்தவர். செல்வச்சந்நிதி முருகனின் திருவிழாக்காலங்களில் இவர் முற்றுமுழுதாக அங்கே இவர் கூடிய காலம் தங்கியிருப்பது இவரின் முருகபக்திக்கு சான்று.இவரின் தமிழ், மற்றும் சைவசமயப்பணிகளை பாராட்டி கலைக்கூடம் அவரை கௌரவித்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது

அடிக்கடி தன் குலத்தெய்வமாகிய விநாயகனையும் செல்வச்சந்நிதி முருகனையும் உச்சரித்தபடி வாழ்நாளை கழித்தபடி தமிழ் மற்றும் சைவசமயம் தழைத்தோங்க அறப்பணியாற்றி வாழ்ந்து வருபவர் பண்டிதர் சி.வேலாயுதம் அவர்கள்.

இப்படியாக ஆசிரியர்,அதிபர்,சித்தாந்த பண்டிதர்,மக்களின் நாடிபார்த்து சொற்பொழிவாற்றும் பக்திரசப்பேச்சாளர் என்று எல்லாம் புகழ்ந்து பேசவல்ல அறிஞர்,பண்டிதர் சி,வேலாயுதம் அவர்களை சிறியேன் கரவைக்குரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

5 comments:

கானா பிரபா said...

பெரியார் திரு சி.வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியத்தந்த சிறப்பான கட்டுரைக்கு மிக்க நன்றி

ரூபன் தேவேந்திரன் said...

கிட்டத்தட்ட 14 வருசத்திற்கு பிறகு மனுசனை போட்டோவில் பார்க்கிறன். போட்டோவை போட்டதிற்கு நன்றி..
அவற்ற இடத்தை எப்படியும் நீங்கள் நிரப்பி போடுவியள் :)

Anonymous said...

Thanks for weiting about my siththappa (Uncle). I am also seeing him after many years - may be 25 years. Thanks

ilangan said...

கட்டுரைக்கு நன்றி. தொடருங்கள் வேர்ட் வேரிபிகேஸனை நீக்குங்க பின்னூட்டமிட குஸ்டமா இருக்கு

ஊடகன் said...

பதிவு அருமையாக உள்ளது..........
மீதமுள்ள் அனைத்தையும் வாசிக்கிறேன்..........