
ஈழத்தின் படைப்புக்கள் வரிசையில் கடந்த இருபத்தியிரண்டாம் தேதி மாசி மாதம்
கான இசை இறுவட்டு ஒன்று வெளிவந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது மீன் பாடும் தேனாடாம் மட்டுநகரில் வெளிவந்திருப்பது சிறப்பு.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கால்பதித்து அங்கெல்லாம் தமிழின் சிறப்பையும் நிகழ்வுகளையும் கொண்டு செல்லலும் ஊடகமாகிய இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பாக இசைப்பிரியர்களை அது அடைந்திருக்கிறது.
ஈழத்தின் மூத்த பாடகரும் பொப்பிசைத்திலகமுமாகிய எஸ்.ராமசந்திரன் அவர்கள் சிறப்பான குரலால் வெளிவந்திருப்பது இதற்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஏனென்றால் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிலகாலம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்,ஈழத்திலிருந்து உலகிற்கு பொப்பிசையை கொண்டுசென்றது மட்டுமல்லாமல் தன் சிறப்பான கம்பீரமான குரலால் பெருமளவு ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாடகர் அவர்களே தமிழில் பொப்பிசையை அறிமுகப்படுத்தியவர் என்பதும் நினைவூட்ட வேண்டிய விடயம்.
ஆகவே அவரின் குரலால் நீண்டநாட்களுக்கு பிறகு வந்த வெளியீட்டு என்ற அடிப்படையில் அதன் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.
அந்த வகையில் இதன் வருகை சிறப்பானதே.
உலகின் பல்வேறு நாடுகளும் சென்று வந்த பெருமையும் பொப்பிசைத்திலகம் அவர்களுக்கு உண்டு.சென்று வந்த இடம் எல்லாம் ரசிகர்களையும் கவர்ந்து விட தவற இல்லை.அப்படி உலகம்பேசும் பாடகர் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்காக வந்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது
இதை முற்று முழுதாக இலங்கை தமிழோசை வானொலிதான் [படைத்திருக்கிறது.
தென்னிந்திய மோகமும் ஈழத்தின் படைப்புக்களை ஆதரவு வழங்காத நிலைமைகளும் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஈழத்தின் படைப்பாக வெளியிட்டிருப்பது இதன் சிறப்பை உணர்த்துகிறது.இதற்கு ஊடகத்தின் துணிச்சல் படைப்பு,மகுடப்படைப்பு என்று தான் இதற்க்கு புகழாரம் சூட்ட வேண்டும்.
தலை நகரில் இருந்து ஈழத்தின் கீழக்கரை மட்டுநகருக்கு விரைந்து சென்று அங்கு வெளியிட்டிருப்பதும் போற்றுதட் குரியதே.ஈழத்தின் தமிழ் பேசும் நல்லுலகம் சென்று அங்கு வெளியிட்டிருப்பதும் முற்றிலும் வியாபார நோக்கமற்ற சிந்தையைக்கொண்டு வெளியிட்டிருப்பதும்தான் இதன் சிறப்பம்சம்.அத்துடன் பொப்பிசைப்பாடல்கள் என்பது பாமர மக்களும் புரிந்து கொள்ளும் கவி நடை மட்டுமல்லாது அந்த மனிதர்களின் உணர்வுகளையும் செயற்பாடுகளையும் நேரடியாகவே எடுத்துக்கூறுவதால் இலங்கை தமிழோசை வானொலி இதை இனங்கண்டு வெளியிட்டிருப்பது பாராட்டக்கூடியதே.அத்தோடு மட்டுமல்லாமல் உலகப் புகழ் பெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கியிருப்பது இதற்கு மிகையூட்டியிருக்கிறது.
முற்று முழுதாக இந்த இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பு ஈழத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக வந்திருக்கின்றது என்றால் மிகையில்லை.
இதை படைத்த படைப்பாளர் குழுக்கே இந்த புகழ் சேரும்
அத்தோடு இலங்கை தமிழோசை வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர் இப்படியான படைப்புக்களுக்கு முன்னுரிமை அளிப்பது வானொலிக்கும் ஈழத்துக்கும் பெருமையான விடயமே.
இப்படியான படைப்பை நானும் இசையின் ரசிகன் என்ற அடிப்படையில் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு தந்த இலங்கைத்தமிழோசை வானொலியின் முகாமைத்துவப்பணிப்பாளர் A.M.ஜசீம் அவர்களுக்கும் பொப்பிசைத்திலகம் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் தொகுத்தளித்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கும் கரவைக் குரலின் வலைப்பூ வாழ்த்துவதோடு இன்னும் பெரிய பெரிய படைப்புக்களை ஈழத்தில் இருந்து தர வேண்டும் என்று வாழ்த்துவதோடு அவர்களோடு இணைந்த இலங்கை தமிழோசை வானொலியின் படைப்பாளர் குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறது
1 comment:
வணக்கம்
இந்த இணையத்தளம் மறைந்திருக்கும் கலைஞர்களுக்கு ஒரு ஒரு நல்ல வாய்ப்புக்களையும் அறிமுகத்தையும் ஏற்படுத்துக்கிறது.அதற்க்கு கரவைக்க் குரல் தினேஷ் அண்ணா அவர்களுக்கு நன்றி .மற்றும் இலங்கைத் தமிழோசை வானொலி ஊடாகவும் நிறைய கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வருகின்றார்கள்
அதற்க்கும் எனது நன்றிகள் பல.
இப்படியான சந்தர்ப்பங்களை அளிக்கும் இலங்கை தமிழோசை வானொலிக்கும் கரவைக்குரல் இணையத்தளத்துக்கும் வாழ்த்துக்கள் பகிர்வதோடு இன்னும் வர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
அன்புடன் ராஜ்
Post a Comment