Saturday, September 20, 2008

முதலிடம் பெற்ற மாணவன் பாசுபதன் எல்லோருக்கும் முன்னுதாரணம்

ஆரம்பகல்வியே ஒரு மாணவனுக்கு அடிப்படைஎன்றும் அதுவே மாணவனை முன்னேற்றகரமான பாதைக்கு வழிகாட்டும் என்று ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை வாழ்த்தும்போது பார்த்தோம்.அதைகூறி ஒரு சில நாள்களில் ஐந்தாம் தர புலமை பரீட்சை முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.
இதில் எமது ஈழத்து மாணவன்,மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் இலங்கை தமிழ்மொழி மூல மாணவர்களில் முதலாம் இடத்தை பெற்றுக்கின்றார்.
எழுது மட்டுவாள்,மருதங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்த மாணவன்.ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவன் இந்த இடத்தை பெற்றிருப்பது எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய அம்சமே.
பிரபலாமான பாடசாலைகளுக்கே முதலிடங்கள் சொந்தம் என்ற வழக்கத்தை மாற்றியிருக்கிறார் மாணவன் பாசுபதன்.
அது மட்டுமல்லாமல் தனது இந்த வெற்றிக்கு காரணகர்த்தாக்களாக இருந்ததாகக் தனது முதற் தெய்வங்களாகிய பெற்றோர் ஆசிரியர்களை குறிப்பிட்டிருப்பதோடு அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்
அதேபோல தனை வழிகாட்டிய பாடசாலைக்கும் நன்றியுடையவனாக் இருப்பேனென்று உறுதிபடக்கூறியுருக்கிறார்.
எல்லோரும் பிரபலமான பாடசாலைகளை நோக்கி படையெடுக்கும் இந்த தருணத்தில் தான் தன்னை வளர்த்த பாடசாலையிலேயே தொடர்ந்தும் கல்விகற்று அதற்கு புகழ் சேர்க்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நிச்சயமாக தர்மலிங்கம் பாசுபதன் சிறந்த எண்ணங்களோடு தனது கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் பெற்ற இந்த வெற்றியால் தனது கல்விக்கு,பெற்றோருக்கு,
பாடசாலைக்கு,கிராமத்துக்கு,ஈழத்துக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்.
அவரின் கல்வி எப்போதும் சிறக்கவும் எப்போதும் அவர் எம் பிரதேசத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று எல்லோருக்கு பொதுவான இறைவனின் நல்லாசிகள் கிட்ட வேண்டுமென கரவைக்குரலின் வலைப்பூ வாழ்த்துவதோடு அவரோடு இணைந்து எம் ஈழத்தில் சித்தியடைந்த அனைவரையும் வாழ்த்துகின்றது

3 comments:

Unknown said...

I appreciate that the work you are doing here.. and it is really nice to hear that boy from a village got the first place.. And now you have shown him to the world.. really nice.. keep on writing.. we as audience like to know about more people from Jaffna.. so keep on writing.. good luck...

Unknown said...

Hai nanum em jaffnavai serntha Tharmalingam pasupathanai vazhththuvathil perumahizhchi adaikiren. Ya Jaffna people maddumallathu, tamil people anaivarume avaral perumai adaikirom enru koorinal mihai aakathu. Dinesh ithu Niranjanavin comment. Nan piraku continue pannum varai ippothu vidai perukiren.

shanthi said...

nice job. It will give more afford to our Student, well done. we expect some more from you.
all the very best, god bless you.